நெட்பிளிக்ஸ் பயன்பாட்டுக்கான கடவு சொல்லை நண்பர்களுக்கு பகிர்வதை தடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை பயன்படுத்த அதன் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் பயன்பாட்டுக்கான கடவு சொல்லை பயனர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் பயனர்கள் அதன் கடவு சொல்லை நண்பர்களுக்கு பகிர்வதை தடுக்கும் பொருட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகளவில் பிரபலமான ஓடிடி தளத்தின் இந்த அதிரடி முடிவு பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.