கோட்டைப்பட்டினம் நிவர் புயல் நிவாரண முகாம்களில் ஆய்வு நடத்திய புதுக்கோட்டை எஸ்பி

updated by m. Raja Muhammed, MIMISAL, 25, NOV,2020. 19:31

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘நிவர்’ புயலுக்காக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவின் பேரில், புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில், கோட்டைப்பட்டினம் சப் டிவிஷனில் டிஎஸ்பி சிவராமன் தலைமையில் நிவர் மீட்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்புக்குழுவில் காவல் துறையினருடன் தன்னார்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். நிவார் புயலால் பாதிப்படைந்தவர்கள் அங்குள்ள முகாம்களில் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டைப்பட்டினத்தில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை எஸ்பி பாலாஜி சரவணன் இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். நிவர் புயல் தாக்குதல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது குறித்தும் புயல் மீட்புக்குழுவினருக்கு எஸ்பி நேரில் ஆலோசனை வழங்கினார்.

மேலும் எஸ்பி பாலாஜி சரவணன் அறந்தாங்கியிலும் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிவர் புயல் காரணமாக எந்த விதமான பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தயார் நிலையில் உள்ளது. அறந்தாங்கி பகுதி மட்டுமில்லாமல் கோட்டைபட்டிணம், மீமிசல் போன்ற கடற்கரை பகுதிகளிலும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்’’ என தெரிவித்தார். இந்த ஆய்வின்வின்போது அறந்தாங்கி ரோட்டரி சங்கத்தினர் சார்பில் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள குடைகள், டார்ச்லைட்கள், ரெயின்கோட் போன்ற பொருட்கள் நிவாரணமாக பொதுமக்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார். இந்நிகழ்வின்போது அறந்தாங்கி காவல்துணை கண்காளிப்பாளர் ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்ஐக்கள் சாமிகண்ணு, சிவக்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!