மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மறியல் போராட்டம்

மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், பல்வேறுஅமைப்பினர் சார்பில் மறியல் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மத்திய அரசானது மேற்கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவைக் கண்டித்தும், விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தியும், தொழிலாளர்களை வஞ்சிக்கும்வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் கொரோனா காலத்தில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியினை வழங்கிடக்கோரியும் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்து நடைபெற்றுவருகிறது.
அதன் ஒருபகுதியாக இன்றையதினம் திருச்சி மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எல்ஐசி, போக்குவரத்து, பாதுகாப்புத்துறை மற்றும் பிஎஸ்என்எல் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும், இதனைதிரும்பபெற வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அலுவலகத்திலிருந்து சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எல்.பி.எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர், தொழிலாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாகச் சென்று எல்ஐசி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
Translate »
error: Content is protected !!