இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது. கொரோனா நிலவரங்களை வெளியிட்டு வரும் மத்திய சுகாதார அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது நேற்று முன்தினம் பதிவான எண்ணிக்கையை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.
இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 14 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஆயிரத்து 977 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் பலியான நிலையில், கொரோனாவுக்கு ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்து 4 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 192 கோடியே 67 லட்சத்து 44 ஆயிரத்து 769 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.