பழமையான கார்கள் மறுசுழற்சி – மத்திய அரசு திட்டம்

 

பழமையான கார்களை மறுசுழற்சி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால், சுற்றுசூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இருப்பினும் 2070ம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை  பூஜ்ஜியமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து முயற்சித்து வருகிறது.

இதற்கென 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் தனிநபர் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலாக உபயோகிக்கப்படும் வணிக வாகனங்களுக்கு முழு தகுதி பரிசோதனை மேற்கொள்ள உத்தவிட்டுள்ள அரசு, அதற்காக அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

2025க்குள் பழைய வாகனங்களின் எண்ணிக்கை 20 மில்லியனாக அதிகரிக்கும் என்றும், இது சூழலியலில் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரியவந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!