இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

சிட்னி
முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். அவரது காயம் குணமடையாததால் எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் சிட்னியில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் டேவிட் வார்னர், அடுத்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியிருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது காயம் தற்போது முன்பை விட குணமாகியிருப்பதாகவும், இருப்பினும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவு 100 சதவீதம் குணமாக இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த 10 நாட்களில் தன்னால் முழுவதும் குணமடைந்துவிட முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், “வார்னர் இன்று இருக்கும் இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உடல் தகுதி அபாரமானது. எனவே அவர் பூரண குணமடைந்து மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Translate »
error: Content is protected !!