குழந்தையை கடத்தி ரூ. 10 லட்சத்திற்கு விற்க முயன்ற கும்பல் கூண்டோடு கைது

சென்னை கோயம்பேட்டில் பெண் குழந்தையை கடத்திச் சென்று ரூ. 10 லட்சத்துக்கு விற்க முயன்ற கணவன், மனைவி, மகன் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

விழுப்புரம் மாவட்டம், நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்தர் ரமேஷ் (வயது 29). இவரது மனைவி சந்தியா. இவர்களது 3 ½ மாத கைக்குழந்தை சஞ்சனா. சென்னை கோயம்பேடு வாழக்காய் மண்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்த ரமேஷின் குழந்தை கடந்த மாதம் 8ம் தேதியன்று இரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் 9ம் தேதி இரவு அம்பத்தூர் எஸ்டேட் மாருதி ஷோரும் அருகே பிளாட்பாரத்தில் கிடந்த குழந்தையை சிறுவன் அளித்த தகவலின் பேரில் போலீசார் மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன ரமேஷ் – தம்பதியின் குழந்தை என தெரியவந்தது. குழந்தையை மீட்ட போலீசார் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை கடத்திச் சென்ற நபர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. அடையாளம் தெரியாத இரண்டு பேர் குழந்தையை துாக்கிச்சென்றதாக கோயம்பேடு பழமார்க்கெட்டில் திருநங்கை பாரதி என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்திருந்தார். அந்த ஒரு க்ளூ மட்டுமே இருந்த நிலையில் தனிப்படை போலீசார் குழந்தை மீட்கப்பட்ட அம்பத்துார் மாருதி ஷோரூம் அருகில் உள்ள சிசிடிவி கேமரா உள்பட அந்த பகுதியில் உள்ள சுமார் 600 சிசிடிவிக்களை துருவினர்.

அதனையடுத்து குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. அந்த ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து அதனை ஓட்டி வந்த அண்ணாநகர் சாந்திகாலனியைச் சேர்ந்த பாபு (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவர் அளித் தகவலின் பேரில் குழந்தையை கடத்திச் சென்ற பாபுவின் மனைவி காயத்ரி (வயது 33) மற்றும் தனது கூட்டாளிகள் திருவண்ணாமலையைச் சேர்ந்த செங்குட்டுவன் (வயது 35), காஞ்சிபுரம் கணேஷ் (24) ஆகியோருடன் சேர்ந்து ரூ. 10 லட்சத்துக்கு விற்பதற்காக கடத்தியது தெரியவந்தது. பாபு உள்பட கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பாபுவின் 17 வயது மகன் உள்பட மற்றொரு சிறுவன் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட குழந்தையை 6 பேரும் அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக், அபிநயா தம்பதிகளுக்கு அந்த குழந்தையை ரூ. 10 லட்சத்து விற்க முயன்றுள்ளனர். ஆனால் அது திருட்டுக்குழந்தை என்பது தெரியாமல் அதனை சட்டப்பூர்வமாக தத்து எடுத்துக் கொள்கிறேன் என்று அபிநயா கூறியதால் திடுக்கிட்ட பாபு போலீசில் மாட்டிக் கொள்வோம் என்பதால் குழந்தையை அம்பத்துார் எஸ்டேட்டில் மாருதி ஷோரும் அருகே புதரில் போட்டு விட்டு அவர்களே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைதான 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறை மற்றும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

 

Translate »
error: Content is protected !!