கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த அதிமுக பேரூராட்சித் தலைவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்த நீதிபதி

தேனி அருகே கர்ப்பிணி மனைவியை சித்திரவதை செய்து கொலை செய்த அதிமுக பேரூராட்சித் தலைவருக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.

 தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் ( 36). கடந்த 2015-ம் ஆண்டு இவர் இவர் ஹைவேவிஸ் பேரூராட்சி அதிமுக தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (19). இருவருக்கும் 2000 ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு திவ்யா சுந்தரி, சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்கற்பகவள்ளி 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி  தனது மனைவி யை தாக்கியது மட்டுமல்லாமல் மார்பு பகுதியில் சிகரெடால் சூடு வைத்துள்ளார் மேலும் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாக தாக்கியுள்ளார் இதில் கற்பம் கலைந்துள்ளது மேலும் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியுனார். இதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு கற்பகவல்லி மயக்க நிலையை அடைந்தார்.

இதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடிய சுரேஷ், அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் தாக்கி கொலை செய்யப்பட்டதும், அவருடைய வயிற்றில் இருந்த 5 மாத கரு சிதைந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேரூராட்சி தலைவராக இருந்த சுரேசை கைது செய்தனர்இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி அப்துல்காதர் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்தவுடன்தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் குற்றவாளி சுரேஷுக்கு சாகும் வரை தூக்கில் இடப்பட வேண்டும் என்றும் கருச்சிதைவு செய்ததற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!