இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மானபங்கம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது

இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி மானபங்கம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 22). கடந்த ஜனவரி மாதம் முதல் அரும்பாக்கத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீராம் (வயது 24) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரீராமன் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத என்று கூறி காயத்ரியை ஸ்ரீராம் அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனது தாயாருக்கு உதவியாக இருக்கும் படி ஸ்ரீராம் கூறியுள்ளார்.

இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மானபங்கம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் கைது அதன்பேரில் காயத்ரி கடந்த 2 மாதங்கள் ஸ்ரீராம் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். அப்போது ஸ்ரீராம், காயத்ரி இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீராம் தன்னை திருமணம் செய்ய மறுத்து அவரை மோசடி செய்ததாக காயத்ரி அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீராம் காயத்ரியை ஆசைவார்த்தை காட்டி மோசடி செய்தது தெரியவந்தது. அதனையடுத்து ஸ்ரீராம் மீது 376 (கற்பழிப்பு) நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!