போலீசார் இரவு ரோந்தின் போது சிக்கிய இரவு திருடர்கள்

இரவில் சுற்றித்திரிந்த செல்போன் பறிப்புக் கொள்ளையர்கள் இருவரை போலீசார் இரவு ரோந்தின் போது கைது செய்து செல்போன், இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த 11ம் தேதியன்று அடையாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோர்நெட் சந்திப்பில் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் உத்தரவின் பேரில் அடையாறு முதல்நிலை காவலர் கண்ணன் மற்றும் ஊர்காவல் படை ராஜசேகர் ஆகிய இருவரும் இரவு ரோந்தில் இருந்தனர். அதிகாலை சுமார் 3. மணியளவில் அந்த வழியாக இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்த முயன்றனர். அவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். இருவரையும் போலீசார் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த பழனி (வயது 28), மற்றொருவர் இளம் சிறார் என்பது தெரியவந்தது. இருவரும் தனியாக இரவில் வரும் நபர்களிடம் செல்போன் பறிக்கும் நோக்கத்துடன் அங்கு சுற்றி வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனமும் திருடப்பட்டது என தெரியவந்தது. இளம் சிறுவனை குழந்தைகள் நல அலுவலரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பழனியிடம் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து மற்றொரு திருட்டு பைக்கை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து விசாரணைக்குப் பின்னர் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இரவு ரோந்தில் விழிப்புடன் செயல்பட்டு செல்போன் பறிப்பு குற்றவாளிகளை கைது செய்த முதல்நிலை காவலர் கண்ணன், ஊர்க்காவல்படை வீரர் உள்ளிட்டோரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

 

 

Translate »
error: Content is protected !!