டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி.

 மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வரும் அதே வேளையில் டெல்லியில் விவசாயிகள் 25 நாட்களை கடந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 கடும் குளிரிலும் மழையிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அரசு முனைப்பு காட்டி வரும் அதே வேளையில் இதுவரையிலும் 33 விவசாயிகள் உயிரிழந்ததாக தெரியவருகிறது.

 போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களை வைத்து மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கமிட்டு அஞ்சலி செலுத்தினர்.

விவசாயிகளின் போராட்டத்தை அரசு முடக்க நினைத்தாலும், இந்த சட்டங்களை திரும்பப் பெறும்வரை தக்காளி மற்றும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் தொடர்ந்து விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தேவைப்பட்டால் டெல்லியில் சென்று போராடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Translate »
error: Content is protected !!