விவசாயிகளின் கோரிக்கை எப்போது தான் நிறைவேறும் !

சிரு குளத்தில் உள்ள மதகு மற்றும் மடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் வீனாகி வருகின்றதுபொதுப்பணித்துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதியில் 30க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன இந்த பகுதியில் உள்ள சோத்துபாறை அணை, மஞ்சளார் அணைகளில் நீர் முழு அளவை எட்டிய பின் அதில் இருந்து வரும் உபரி நீரை குளங்களில் தேக்கி வைத்து பின் விவசாயத்திற்க்கு பயண்படுதவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் பயண்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் தொடர் மழையின் காரணாம கும்பக்கரை, சோத்துபாறை அணை உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு வரும் நீரை கொண்டு பெரியகுளம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட குளங்களில் நீர் நிறைந்தது. இந்நிலையில்  பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி சிருகுளமும் அதன் முழு அளவை எட்டிய நிலையில் சிருகுளத்தின் மதகு பகுதி மற்றும் மடை முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் குளத்தில் உள்ள நீர் வீனாகி வருகின்றது.

டந்த 3 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் குளத்தின் மடை மற்றும் மதகை சீரமைக்க பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிகை எடுக்காத நிலையில் நீர் வினாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே குளத்தில் நீரை தேக்கி வைக்கை மதகு மற்றும் மடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!