சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை காணவில்லை என்றும் யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் எனவும் சிறுமியின் தாயார் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் தண்டையார்பேட்டை, வவுசி நகரைச் சேர்ந்த சதீஷ் (வயது 19) என்ற வாலிபர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனையடுத்து சதீஷைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டு, பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதன்பேரில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!