21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது * தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை, மெரீனா பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

நேற்று முன்தினம் மாலை, மயிலாப்பூர் போலீசார், சென்னை மெரீனா கடற்கரை காந்திசிலை பின்புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 நபர்களை நிறுத்தி மடக்கி சோதனை செய்தனர். காருக்குள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனையடுத்து காரில் கடத்தி வந்த சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த தங்கையா, நெற்குன்றம் சசிகுமார் (33) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 21 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா மற்றும் இன்னோவா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை மயிலாப்பூர் போலீசார் மெரீனா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் தங்கையா மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகள் உட்பட சுமார் 20 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் தங்கய்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை கைது செய்த குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நற்சான்றிதழ்கள் வழங்கி வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!