கேரளாவில் புத்தாண்டுக்கான கடும்கட்டுபாடுகளை விதித்த மாநில அரசு

தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.                                                                                                

திருவனந்தபுரம்

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநிலஅரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.

எனவே, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது வைரஸ் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. ஆகவே, மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது அவசியம்.

இதுதொடர்பாக மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்ததுஇந்நிலையில் கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி கேரள மாநிலத்தில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ள்து.

மேலும் இன்று இரவு 10 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை நிறுத்திக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதுமுன்னதாக தமிழகத்தில் கொரோனா காரணமாக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூடவும், சென்னை கடற்கரை சாலையில் முற்றிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

 

Translate »
error: Content is protected !!