சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.

உருமாறிய கொரோனா முதன்முதலில் இங்கிலாந்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த புதியவகை உருமாறிய கொரோனா பழைய கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மிகுந்த அச்சமடைந்துள்ள பல நாடுகள் இங்கிலாந்து  உடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

இருப்பினும் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து தவிர பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் உறுதி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், சீனாவிலும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில்  இருந்து சீனா திரும்பியுள்ள 23 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீனா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 தொடர்ந்து பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.இதுவரை கொரோனா பாதிப்புகளால் உலகமெங்கும் மொத்தம் 17 லட்சத்திற்கும் அதிகமான  மக்கள் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!