தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கோரோனோ தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகையை நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.

 இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவேக்சின், ஜைகோவ்டி போன்ற தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை இறுதிக்கட்ட மருத்துவ சோதனையில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி,

இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. புத்தாண்டில் இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

ஓரிரு நாளில்கோவிஷீல்டுதடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிடும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை குழப்பம் இன்றி விரைவாக கொண்டு சென்று மக்களுக்கு செலுத்துவதை உறுதி

செய்வதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து நாளை நாடு முழுவதும் ஒத்திகை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது 3 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

 அவ்வகையில் தமிழகத்தில் நாளை தடுப்பூசி ஒத்திகைக்காக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி போடுவதற்காக பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

 சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதுதவிர திருவள்ளூர், நீலகிரி மற்றும் நெல்லையிலும் ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்களில், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

 

Translate »
error: Content is protected !!