லா லிகா கால்பந்து லீக் : அட்லெட்டிகோ மாட்ரிட் அணி ஜெடாபி அணியை தோற்கடித்தது

லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது.

பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார். நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்எல்ச்சி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் அட்லெட்டிகோ மாட்ரிட் 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

 

Translate »
error: Content is protected !!