சென்னை நகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை அண்ணாநகர், கிண்டி, குன்றத்துார், பாண்டிபஜார் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்.

 

சென்னை, கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஷோபனா (வயது 39). தனது வீட்டில் இருந்த சுமார் 50 சவரன் தங்கநகைகள் மற்றும் பணம் ரூ. 80 ஆயிரம் ஆகியவற்றைக் காணவில்லை என வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் தினேஷ்குமார், தலைமைக்காவலர் ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவயிடத்தில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். ஷோபனாவின் கணவர் சமீபத்தில் இறந்த காரணத்தால் ஷோபனா அவரது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் அவரது வீட்டில் தங்கி இருந்த ஷோபனாவின் அண்ணன் பஷீர் முகமது சாஹித் என்பவர் தங்கநகைகளை திருடிச்சென்றது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து கேரளாவைச் சேர்ந்த பஷீர் முகமது சாஹித் வயது (45) சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 32 ஆயிரம்- பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் பஷீர் முகமது சாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை, தி.நகர், டாக்டர் தாமஸ் ரோட்டைச் சேர்ந்தவர் செந்தில் (36). கடந்த 29ம் தேதி இரவு 10 மணியளவில் தி.நகர், கிருஷ்ணசாமி தெருவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பாண்டிபஜார் போலீசார் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திக், முதல்நிலை காவலர்கள் மணிகண்டன் மற்றும் காவலர் சார்லஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாணை நடத்தினர். அதனையடுத்து கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் (எ) சொரி சுரேஷ் (32), திநகரைச் சேர்ந்நத அசோக் (எ) அசோக்குமார் (22) ஆகியோரை கொலை நடந்த 4 மணி நேரத்தனர்.

சென்னை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், சர்தார் காலனியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வரும் கிரிதரனின் லேப்டாப்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அது தொடர்பாக வேளச்சேரி உதவி ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக்காவலர்கள் அச்சுதராஜ், தாமோதரன் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சந்தோஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் லேப்டாப் திருடிய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ராஜதுரை (23), என்பவரை திருச்சியில் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 11 லேப்டாப்கள், 9 செல்போன்கள், 8 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் ஆயுதப்படை காவலர்கள் ரேணுகோபால், மனோஜ்குமார், சலீம் மாலிக், பிரதீப் ராஜ்குமார், சிவபிரகாஷ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் கடந்த 3ம் தேதியன்று ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது திருமுடிவாக்கம், 400 அடி வெளிவட்ட மேம்பாலத்தில் போலீசைக் கண்டதும் 2 நபர்கள் காரை விட்டு தப்பியோடியனர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்று கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்கள் மாங்காட்டைச் சேர்ந்த தினேஷ் (19), அசோக் (23) என்று தெரியவந்தது. இருவரும் அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவரின் காரை திருடிக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அண்ணா நகர் துணைக்கமிஷனர் ஜவகர் மேற்பார்வையில் சைபர்கிரைம் பிரிவைச் சேர்ந்த மதுரவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெங்கடேசன், வில்லிவாக்கம் தலைமைக்காவலர் கதிரவன், கொளத்தூர் தலைமைக் காவலர் மணிசங்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் செல்போன் பறிப்பு, திருட்டு, வழிப்பறி என 40 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 37 குற்றவாளிகளை கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து 95 செல்போன்கள் மற்றும் 10 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!