மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கங்குலி அளித்த பேட்டி

நான் நலமுடன் உள்ளேன், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி என மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆன சவுரவ் கங்குலி பேட்டியில் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரங் கங்குலிக்கு திடீரென நெஞ்சு வலியுடன் தலைசுற்றுதல் மற்றும் வாந்தி ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 2ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.

லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கங்குலி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. டில் வைத்தும் கங்குலியின் உடல் நிலை தினசரி கண்காணிக்கப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளதுசொந்த விருப்பத்தின் பேரில் இன்று மருத்துவமனையில் இருப்பார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சவுரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்பொழுது, நான் நலமுடன் உள்ளேன்சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என அவரது பேட்டியில் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!