காவல்துறை மற்றும் குழந்தைகள் நலக்காவல் அதிகாரிகளுக்கு 2ம் நாள் புத்தாக்கப் பயிற்சி

சென்னை நகரில் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த 2ம் நாள் புத்தாக்கப் பயிற்சி தலைமையிட கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் நடந்தது. இதில் காவல் அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டனர்.

இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)- 2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதரச் சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற சென்னை நகர காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை நகர பெண்கள், பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இந்த பயிற்சி காவல்துறை மட்டுமின்றி தெற்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கும் அளிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இந்த பயிற்சியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். அதனையடுத்து 2ம் நாளாக நேற்று (26.09.2020) இந்த பயிற்சி தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்கள் இசபெல், பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகள், வில்லைகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு வழங்கினர். Child Welfare Committee (CWC) மற்றும் காவல் அலுவலர்களுக்கான நடைமுறைகள் குறித்து விளக்கியும் வழக்கறிஞர் ஆதிலஷ்மி, ஆன்ட்ரு ஜேசுராஜ், டேவிட் ஆகியோர் குழந்தைகளுக்கான சட்டங்கள் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் சண்முகப்பிரியா மற்றும் குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் ரேகா, ஆண்ட்ரூஸ் அபிரகாம், வித்யா ரெட்டி, சூரியகலா, தமிழ்செல்வி, ரேச்சல், டாக்டர் கோமளா ஆகியோர் குழு உரையாடலில் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதித்தனர்.

தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் இப்பயிற்சியில் ஒரு பகுதியான குழு விவாதத்தில் கலந்து கொண்டு குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் குழந்தைகள் நலத்துடன் தொடர்புடைய இதர துறையினருடன் இணைந்து எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பதனை விளக்கி சிறப்புரை ஆற்றினார். 2ம் நாள் பயிற்சியின் நிறைவு பகுதியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி நன்றியுரை வழங்கி நிறைவு செய்து, நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
***

Translate »
error: Content is protected !!