வக்கீல் பீஸ் கேட்டு மிரட்டியதால் ரயில் முன்பு பாய்ந்த இளைஞர் தற்கொலை?: போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

சென்னை புளியந்தோப்பில் போலீசுக்கு பயந்து இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்புமுனையாக ரூ. 50 ஆயிரம் பீஸ் கேட்டு வக்கீல் மிரட்டியதால் இறந்தது தெரியவந்துள்ளது.

சென்னை, அந்தகரை பி.பி தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 25). மதுரையைச் சேர்ந்த பட்டதாரியான இவர் அம்பத்தூரில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பழைய செல்போன் ஒன்றை லட்சுமணனின் தாய் லட்சுமணனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ம் தேதி புளியந்தோப்பு போலீசார் லட்சுமணனின் வீட்டுக்குச் சென்று “நீங்கள் பயன்படுத்தும் போன் திருட்டு மொபைல் எனவும் அதனால் விசாரணைக்காக புளியந்தோப்பு காவல்நிலையம் வருமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து கடந்த 7 ம் தேதி லட்சுமணன் தனது வக்கீலுடன் புளிந்தோப்பு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். விசாரணையில் தனக்கு மொபைல் பற்றி எந்த விவரங்களும் தெரியாது எனவும் மேலும் சில மாதங்களுக்கு முன்பாக அந்த மொபைலை ஒரு பெண்ணிடமிருந்து தனது தாய் வாங்கி தனக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். போலீசார் மொபைல் விற்ற பெண்ணின் வீட்டை காட்டும்படி லட்சுமணனை அழைத்து சென்றபோது அந்த பெண் சில மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்தப் பெண் குறித்த விபரங்கள் தேவைப்படும் போது நீங்கள் விசாரணைக்காக காவல்நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளதாக வருகிறது. இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி மாலை லட்சுமணன் நுங்கம்பாக்கத்தில் மின்சார ரயில் முன்பு

பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் லட்சுமணனின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘‘போலீசாரின் விசாரணையில் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்று முடிந்ததும் லட்சுமணனிடம் அவரது வக்கீல் தனது பீசாக 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். மேலும் போலீசாரின் கைதில் இருந்து தப்பிக்க மேலும் ரூ 50 ஆயிரம் தர வேண்டுமெனவும் எனவும் வக்கீல் கேட்டுள்ளார். தன்னால் தர இயலாது என லட்சுமணன் கூறியதும் அவருக்கு வக்கீல் மிரட்டல் விடுத்ததால் லட்சுமணன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உண்மையில் வக்கீல் பணம் கேட்டு மிரட்டியதால் லெட்சுமணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!