முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று நேரில் ஆய்வு

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.

நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும் 18 ந் தேதி டெல்லி செல்கிறார். மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.80 கோடியில்தனது சாம்பலிலிருந்து, தானே எழுந்து வரும் இறப்பில்லா பறவையாக, உலக இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பீனிக்ஸ் பறவையின் வடிவில், மொத்தம் 79.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்படுகிறது.

 அதனை, அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாழ்வை விளக்கும் அருங்காட்சியகம், அறிவு சார் பூங்கா, நீரூற்றுகள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகள், புல்வெளிப் பூங்கா என்று, உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழா, அண்ணா தி.மு.. வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வமும் நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பணிகளை முடுக்கி விட்டார்கள். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

முதலமைச்சருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்யா எம்.எல்.., விருகை வி.என். ரவி எம்.எல்.., ஆதிராஜாராம், எம்.கே. அசோக் உட்பட பலர் உடன் சென்றிருந்தார்கள். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். ஜெயலலிதா நினைவிட பணிகளை முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தார்.

உலகத்தரத்தில் இந்த நினைவிடம் மிக பிரமாண்டாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 ந்தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்

இந்த சந்திப்பு அண்ணா தி.மு.. பாரதீய ஜனதா கட்சிகளிடையே கூட்டணியை உறுதி செய்வதுடன், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்தனர்.

இதனிடையே கூட்டணியின் பெரிய கட்சி அண்ணா தி.மு.. அவர்கள்தான் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தமிழக பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் 18 ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

 

Translate »
error: Content is protected !!