ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா: கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்.

வாஷிங்டன்,

வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நாளை மறுநாள் பதவி ஏற்கிறார்கள்.

இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட ஆயிரக்கணக்கான கோலங்களை உருவாக்கும் ஆன்லைன் முயற்சியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 1,800-க்கும் மேற்பட்ட நபர்களும், இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றனர். புதிய நிர்வாகத்துக்கு நல்ல தொடக்கத்தின் அடையாளமாக நாடு முழுவதும் இருந்து வரும் கோலங்களை வெள்ளை மாளிகையின் முன் காட்சிப்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது.

வாஷிங்டன் போலீசார் இதற்கு அனுமதியும் வழங்கினர். இருப்பினும், வாஷிங்டனில் எதிர்பாராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் இதன் விளைவாக, பைடன் மற்றும் ஹாரிஸைஅனைவருக்குமான ஜனாதிபதிஎன்ற மனப்பான்மையுடன் வரவேற்கவும், அமெரிக்காவின் பல கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், நேற்று முன்தினம் கோலங்கள் போடப்பட்ட ஆயிரக்கணக்கான ஓடுகளின் படங்கள் ஒரு வீடியோவாக உருவாக்கப்பட்டது. உள்ளூர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கோலங்கள் போடப்பட்ட ஓடுகளை காட்சிப்படுத்துவதற்கான இடமும், நாளும் தீர்மானிக்கப்படும் என்றுகோலம் 2021′ ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!