டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி; பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும் உத்வேகமும் நன்குத் தெரிந்தது. வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தார்கள். இந்திய அணிக்குப் பாராட்டுகள். அடுத்து விளையாடவுள்ள ஆட்டங்களுக்கு வாழ்த்துகள் என்றார்.

Translate »
error: Content is protected !!