சென்னை கொடுங்கையூரில் சிக்கிய 375 கிலோ குட்கா

சென்னை கொடுங்கையூரில் ரோந்துப் பணியில் இருந்த போது போலீசார் 375 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

 

கொடுங்கையூர் போலீசார் நேற்று காலை 7.30 மணியளவில் அந்த பகுதி, மீனாம்பாள் சாலையில் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் வந்த நபர்கள் போலீசை கண்டதும்
சரக்கு வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதனைக் கண்ட ரோந்துப் போலீசார் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற போது அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். அதனையடுத்து அவர்கள் விட்டுச்சென்ற டாடா ஏஸ் சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சரக்கு வாகனத்துக்குள் பிரித்துப் பார்த்த போது உள்ளே இருந்த 375 கிலோ ரெமோ மற்றும் எம்.ஜி.எம். ஆகிய பான் மசாலா பாக்கெட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டாடா ஏஸ் காரை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குட்காவை கடத்தி வந்த நபர்கள் யார் எங்குள்ளவர்கள் என்பது குறித்தும் போலீசார் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!