தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து, சமீர் வர்மா தோல்வி அடைந்து வெளியேற்றம்

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 13-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் (தாய்லாந்து) 38 நிமிடங்களில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா 13-21, 21-19, 20-22 என்ற செட் கணக்கில் 3-ம் நிலை வீரர் ஆன்டெர்ஸ் ஆன்டன்செனிடம் (டென்மார்க்) போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 1 மணி 22 நிமிடங்கள் நீடித்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்த நிலையில் ஆண்கள் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டிசிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையரில் சாய்ராஜ்அஸ்வினி ஜோடிகள் அரைஇறுதிக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளன.

 

Translate »
error: Content is protected !!