சசிகலா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: சக்கரை அளவு அதிகரித்துள்ளதால் இன்சுலின் செலுத்தப்படுகிறது – மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்

இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும், கொரோனா தொற்று குறைந்துள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், “ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதால், சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.

அவர் உணவு உட்கொள்கிறார் என்றும், ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளதுமேலும் சசிகலா எழுந்து உட்கார்ந்தாகவும், உதவியுடன் நடப்பதாகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!