சென்னை, கொடுங்கையூரில் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் உடைத்ததால் அலாரம் ஒலித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே வங்கியின் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 7 மணியளவில் ஏடிஎம் மில் இருந்த
அலாரம் திடீரென அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ஏடிஎம் இயந்திரத்தை பார்த்தனர்.
அப்போது ஏடிஎம் மின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்படிருந்தன. மர்ம நபர்கள் ஏடிஏம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. அது குறித்து உடனடியாக அந்த குதி மக்கள் கொடுங்கையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வங்கி
அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து வந்து ஒலித்துக் கொண்டிருந்த அலாரத்தை
அணைத்தனர். ஏடிஎம்மை உடைத்து மர்ம நபர்கள் பணம் கொள்ளையடிக்க வந்திருக்கலாம் எனவும் அவர்களின் திட்டம் பலிக்காததால் ஆத்திரத்தில் ஏடிஎம் கதவுகளை கற்களை கொண்டு அடித்து உதைத்து விட்டு சென்றிருக்கலாம் எனவும்
போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏடிஎம் மில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகள் மற்றும் மிஷினில் இருந்த பணம் ஆகியவற்றை ஆய்வு செய்தபின்புதான் முழுமையான தகவல்கள் வெளிவரும் போலீசார் தெரிவித்தனர்.