பேஸ்புக்கில் பழகி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

சென்னை மாதவரத்தில் பேஸ்புக்கில் பழகி நேரில் வரவழைத்து செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், சேலைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 22). இவருக்கு மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ் (20) என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமானார். பின்பு இருவரும் நண்பர்களாகி கடந்த 21ம் தேதியன்று நேரில் சந்திப்பதாக முடிவெடுத்தனர். அதனையடுத்து மோனீஷ், தனது நண்பர் விஜயகுமார் என்பவரை இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைப்பதாகவும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து தன்னை மாதவரத்தில் சந்திக்கலாம் என ஐயப்பனிடம் கூறியுள்ளார். அதன்படி ஐயப்பன் கடந்த 21ம் தேதியன்று அன்று இரவு விஜயகுமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று ஐயப்பனை ஏற்றிக் கொண்டு, மாதவரம் அலெக்ஸ் நகர் மைதானத்திற்கு வந்தனர்.

அப்பொழுது அங்கிருந்த மோனீஸ் மற்றும் 2 நபர்கள் பேசிக் கொண்டிருந்த போதே கத்தியைக் காட்டி மிரட்டினர். ஐயப்பன் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ஐயப்பன் மாதவரம் போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதனையடுத்து ஐயப்பனிடம் திட்டம் போட்டு வழிப்பறியில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ், கொடுங்கையூரைச் சேர்ந்த விஜயகுமார் (23), தமிழ்செல்வன் (22), தினேஷ் (23) ஆகிய 4 நபர்களை நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஐயப்பனின் 1 செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய யமஹா இருசக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் மோனீஷ் மீது மாதவரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் மோனிஷ் முகநூல் மூலம் அறிமுகமான ஐயப்பனை
வரவழைத்து பணம், தங்கநகைகளை பறிக்க திட்டமிட்டு, அவரது நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!