இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி – மெக்சிகோ நாட்டு அதிபர் தகவல்

இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ சிட்டி,

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசியானது, புதிய வகை கொரோனாவிடம் இருந்தும் பாதுகாப்பு வழங்கக் கூடியது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “இந்தியாவிடம் இருந்து 8,70,000 கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகள் அடுத்த மாத தொடக்கத்தில் மெக்சிகோவை வந்தடையும். இதேபோன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளும் மெக்சிகோவிற்கு வரவுள்ளதுஎன்று தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!