இன்று உலக புற்று நோய் தினம்…ஸ்டாலின் விழுப்புணர்வு சொற்கள்

செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர். 3 கோடியே 26 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 5 வருடங்களாக சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.

சர்வதேச ரீதியில் உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2014ம் ஆண்டுக்கான இத்தினத்தின் தொனிப்பொருள், ‘மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக பார்க்கப்படுகின்றது.

ஸ்டாலின் சொற்கள்:

மனிதகுலத்துக்கான ஆபத்துகளை அறிவியல் – மானுட நேயத்தால் வென்று வந்திருக்கிறது உலகம்! WORLD CANCER DAY-ல் சாந்தா அம்மையார் உள்ளிட்ட உலகளாவிய மருத்துவர்களைப் போற்றுவோம். புற்றுநோயைக் குணப்படுத்தவும் – வராமல் தடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உருவாக்குவோம்.

 

 

 

Translate »
error: Content is protected !!