தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை

ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் வந்துள்ள மத்திய குழு,  ஐந்து நாட்கள் தங்கியிருந்து சுகாதாரத்துறையின் பல்வேறு பணிகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கோவிட் விதிமுறைகளை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு நேரில் சென்று கண்காணிக்க மத்திய குழு திட்டமட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. அந்த குழுவில் மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் 5 நாட்கள் தங்கியிருந்து கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த தேவையான ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளது.

Translate »
error: Content is protected !!