ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக தயாரான படம் “தலைவி”. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஜெயலலிதாவின் வாழக்கையில் அவர் கடந்த வந்த பாதை.. சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் பல்வேறும் இன்னல்களை கடந்து முதலமைச்சர் ஆனது வரை இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

 

வருகிற 10ஆம் தேதி “தலைவி” படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இன்று நடிகை கங்கனா ரணாவத் சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்..

Translate »
error: Content is protected !!