68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து ஏலத்தில் பங்கேற்ற டாடா குழுமம் அதனை வாங்கியது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையான டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியாவின் முழுமையான நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.