அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் மற்றும் பன்நோக்கு மருத்துவப் பணியாளர்களை மீண்டும் பணிக்கு வரும்படி சுகாதாரத்துறை அழைத்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் தீர்வு தற்காலிகமானதாக இருக்கக் கூடாது என தெரிவித்துள்ள ராமதாஸ், அனைத்து அம்மா கிளினிக் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தி அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.