தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1500 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதல் தவணையாக 76 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணையாக 44 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.