ஓமிக்ரானுக்கு எதிராக N 95 மாஸ்க் போடுங்க

 

அதிகம் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரானுக்கு எதிராக N-95 முககவசத்தை பயன்படுத்தும்படி மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியபோது, உலக நாடுகளில் முககவசம் மற்றும் கிருமி நாசினி பயன்பாடு அதிகரித்தது. பலரும் N-95 முககவசத்தை தேடி வாங்கியதால், கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக இரு அடுக்கு கொண்ட சாதாரண முககவசத்தை அணிந்தாலே போதுமானது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்தநிலையில் அதிக பரவல் தன்மை கொண்ட ஒமிக்ரானும் உலக நாடுகளில் பரவி வருகிறது.  அமெரிக்காவில், தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில் N-95 முககவசத்தை அணியும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த முககவசம் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது.

 

 

 
Translate »
error: Content is protected !!