ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. தலைநகர் காபூலில் வங்கிகள் திறந்தவுடன் தங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் வங்கியின் முன் திரண்டனர். இருப்பினும், வங்கிகளில் போதுமான பண இருப்பு இல்லாததால் பணத்தை எடுக்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முன்னதாக, அமெரிக்க மத்திய வங்கியில் ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி வைத்திருந்த 7 பில்லியன் டாலர் தங்கம் / பணத்தை அமெரிக்க அரசு முடக்கியது. இதேபோல், சர்வதேச நிதியம் இந்த வாரம் 460 மில்லியன் டாலர்களை ஆப்கான் அரசிடம் இருந்து நிறுத்தி வைத்துள்ளது . இதன் விளைவாக, ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி இருப்பதாக தகவல்கள் உள்ளன.