அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு பாரத் பயோடெக் அனுமதி கோரியுள்ளது. இந்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமான ஒகுஜென் தெரிவித்துள்ளது.
2 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 526 சிறுவர்களுக்கு 28 நாள் இடைவெளியில் தடுப்பூசிகள் போடப்பட்டு நேர்மறை சோதனை செய்யப்பட்டது. எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.