வன்னியர்களுக்கான 10.5 % உள் ஒதுக்கீடு ரத்து

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பல கட்ட விசாரணக்குப் பிறகு அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை உறுதி செய்துள்ளதுடன் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தீர்ப்பில் சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்றும் தணிகாச்சலம் அறிக்கையில் போதிய தரவுகள் இல்லை எனவும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!