பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் – சபாநாயகர் ஓம் பிர்லா நேரில் ஆய்வு

சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கூட்டத் தொடரின் போது, எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பத்திரிகையாளர் மாடம், ஹால்வே, சென்டர் ஹால் ஆகியவற்றை…

மராட்டியம்: பெண் காவலர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு

மராட்டிய மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் காவலர்களின் பணி நேரம் தற்போது 12 மணி நேரமாக உள்ள நிலையில், பெண் காவலர்களுக்கு சிறந்த பணி மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் நோக்கத்தில் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படுவதாக அம்மாநில…

பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி.. இந்தியாவில் பரிசோதிக்க மருந்து தர ஆணையம் அனுமதி

பாரத் பயோடெக்கின் நாசி வழி பூஸ்டர் தடுப்பூசி சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.…

எடியூரப்பாவின் பேத்தி பெங்களூருவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநிலம் பா.ஜ.க தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா (வயது 30) இன்று (வெள்ளிக்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சவுந்தர்யா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மத்திய பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.…

பிறந்த நாளை முன்னிட்டு கோபூஜை செய்தார் கர்நாடக முதலமைச்சர்

கர்நாடக முதல்வராக பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 62வது பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் இல்லை என பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பிறந்த நாளை முன்னிட்டு பசுமாட்டுக்குப் பூஜை செய்து வழிபட்டார். பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்ற ஆறு…

கடவுள் குறித்து சர்ச்சை பேச்சு.. நடிகை ஸ்வேதா திவாரி மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து 24 மணி நேரத்தில் விசாரணை நடத்த காவல்துறைக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். நடிகை ஸ்வேதா திவாரி ‘ஷோ ஸ்டாப்பர்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.…

கேரளாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது.. ரயில் சேவைகள் பாதிப்பு

கேரளாவில் உள்ள ஆலுவா ரயில் நிலைய யார்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்து, இன்று காலை முதல் ஷோர்னூர்-எர்ணாகுளம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் ஆலுவா நிலையத்தின் மூன்றாவது நடைமேடையில் நுழைந்தபோது சரக்கு ரயிலின் இரண்டாவது,…

மாணவர் போலீஸ் படை சீருடையுடன் ஹிஜாப் அணிவது மதச்சார்பின்மையை பாதிக்கும் – கேரள அரசு

கேரளாவில், 8ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர் மாணவ போலீஸ் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து, கேரள மாநில அரசு கூறுகையில், “பாலின நீதி, இனம் மற்றும் மத…

இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த…

துப்பாக்கிச்சூட்டில்  ராணுவ வீரர்கள் 3 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில்,  பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  ராணுவ வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரில் நேற்று   கொடிக்கொம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இந்த கொண்டாட்டத்திற்கு இடையே ஷோபியான் மாவட்டத்தில், தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய…

Translate »
error: Content is protected !!