பெரியகுளத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டிகை முன்பணம், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியகுளம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை முன்பாக, தொழிற்சங்கங்களில் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

சீதாப்பழத்திற்கு உரியவிலை இல்லை! கொடை பகுதி விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த மலை சீதாப்பழம் விளைச்சல் துவங்கியுள்ளது. எனினும், விளைச்சல் மற்றும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பழவகைகளில் ஒன்றாக சீதாப்பழம் உள்ளது. மலைப்பகுதியில் விளையும்…

ஏ.டி.எம். உடைத்து கொள்ளை முயற்சி! போடி அருகே பரபரப்பு!

போடி அருகே வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில், பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. போடி-தேவாரம் சாலையில் உள்ள இந்த ஏ.டி.எம்.…

அப்பாடா, முடிவெடுத்தார்ஆளுநர்! 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல்

நீண்ட இழுபறிக்கு பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் முன்னுரிமை வழங்க ஏதுவாக, 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா…

மிலாது நபியை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து!

மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இறைத்தூதர் நபிகள் நாயகம் அவதரித்த நாளை இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் “ மிலாது நபி ” பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.…

இன்று 2,652 பேருக்கு தொற்று உறுதி! ஒரே நாளில் 35 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3 ஆயிரத்திற்கு கீழாக கட்டுக்குள் உள்ளது.  தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின்…

7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளிட்ட தமிழக அரசு!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த அரசாணையை, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.…

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்! 2 நாட்களுக்கு கனமழை உண்டு

சென்னை நகரில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே சென்னை உட்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் நேற்றிரவு…

அறிக்கை என்னுடையதல்ல; ஆனால் விஷயம் உண்மை! ஜகா வாங்குகிறார் ரஜினி!

சமூக வலைதளங்களில் தனது பெயரில் வெளியான அறிக்கை தன்னுடையது அல்ல; ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த இரு தினங்களாக நடிகர் ரஜினியின் பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி பெரும்…

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை! தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம்

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Translate »
error: Content is protected !!