சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள், விளம்பர தட்டிகள், போஸ்டர்களை கட்டுமானத்துடன் அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தலின்படி, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து விதிகளின்படி அபராதம் அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.00 மணிக்குள் தனி நபர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டதன் விவரத்தினை அறிக்கை மூலம் மாநகர வருவாய் அலுவலருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.