தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் திட்டத்தை 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி தொடர்ந்த வழக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலோ, தேசிய திட்டத்தின் கீழோ நியமிக்கப்படும் பணியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார். நலிந்த பிரிவினரை எப்படி நடத்துகிறதோ அந்த அடிப்படையில் தான் நாட்டின் சிறப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது என மகாத்மா காந்தி கூறியுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.