தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி,

தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த்
அவர்கள் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவரது பிறந்தநாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கனிமொழி எம்பி ட்விட்டரில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!