கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெற்று வருகிறது. தற்போது கரூர், நாகை மற்றும் சிவகங்கையில் ரூ .10 கோடி செலவில் 3 வேளாண் கல்லூரிகளை அமைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.