செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சினிமா பி.ஆர்.ஓ கள்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுடைய பி ஆர் ஓ கள் தொடர்ந்து செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது சகஜமான ஒன்றாக மாறிக் கொண்டு வருகிறது. சினிமா நடிகர்களையும், அவர் சார்ந்த செய்திகளையும், ஊடகத்திற்கும் பொது மக்களுக்கும் இணைக்கக்கூடியவர்கள் சினிமா பி.ஆர்.ஓ கள்.

கொரோனா நோய் காரணமாக சில ஆண்டுகளாக சினிமாக்கள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட பிறகு ஏராளமான தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் திரைப்படங்கள் வெளிய ஆவதற்கு முன்பு அப்படத்தின் ஆடியோ ரிலீஸ், ட்ரெய்லர் ரிலீஸ், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களிலோ, சென்னையில் இருக்கக்கூடிய நட்சத்திர விடுதியில் நடப்பது வழக்கமாக உள்ளது.

இப்படி நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கு செய்தியாளர்கள் செல்வதும் மற்றும் சினிமா துறை சார்ந்தவர்களிடம் கேள்வி எழுப்புவதும் சகஜமான ஒன்று. ஆனால் தற்பொழுது சினிமா நடிகர்களின் பி.ஆர்.ஓ கள், நடிகர்களிடமோ, இயக்குனரிடமும் கேள்விகள் கேட்கக் கூடாது கேட்பதற்கு நீ யார் என்று செய்தியாளர்களிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள்.

குறிப்பாக சமீபத்தில் திருமணமான விக்னேஷ் சிவன், நயன்தாராவின் செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு தொலைக்காட்சி செய்தியாளரை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தாக்கிய காட்சிக்கூடம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்காக நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரன் மீது மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ராம் சீதா படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கதாநாயகன் துர்க்கை சல்மான் மற்றும் படக்குழுவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது துர்க்கல் சன்மானிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய பொழுது , அங்கிருந்த துர்க்கர் சல்மானின் பி.ஆர்.ஓ யுவராஜ் என்பவர் கேள்வி எழுப்பிய செய்தியாளரை நீ யார் இது போன்ற கேள்விகளை நீ கேட்கக்கூடாது வெளியே போ என்று சொல்லி, அவர் வைத்திருந்த பவுன்சர்களை வைத்து அவரை அடித்து வெளியே தள்ளியுள்ளார்.

இருப்பினும் அங்கிருந்த சினிமா செய்தியாளர்கள் இதைப்பற்றி யுவராஜ் இடம் கண்டனம் தெரிவிக்காதது வருத்த முடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் மன வருத்தம் இருந்தாலும் சக செய்தியாளரை யாரோ ஒருவர் தாக்கும் பொழுது, அதை வேடிக்கை பார்க்காமல் தட்டி கேட்டால் நாளை இது போன்று யாருக்கும் நடைபெறாமல் இருக்கும். குறிப்பாக இது போன்ற பி.ஆர்.ஓ கள் தொடர்ந்து இதுபோல் நடவடிக்கையில் ஈடுபடுவது தவறாக ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!