தமிழகத்தில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மதம் மாறியவருக்கு கலப்புத் திருமணச் சான்றிதழ் வழங்கினால், கலப்புத் திருமணங்களுக்கான சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பால்ராஜ் என்பவர், அருந்ததியர் இனத்தை சேர்ந்த அமுதாவை திருமணம் செய்த நிலையில், கலப்புத் திருமணச் சான்றிதழுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கலப்புத் திருமணச் சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.