கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயம்

 

புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் வாங்கிய 30 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை சாதனங்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் டிஜிட்டல் தெர்மா மீட்டர் உள்ளிட்டவை அளிக்கப்பட்டிருந்தது. இதில், சுமார் 30 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தெர்மா மீட்டர், பிபிஇ கிட், நான்கு சர்க்கர நாற்காலிகள் மாயமாகியுள்ளன.

இந்நிலையில், அலட்சியமாக பணியாற்றிய தேர்தல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, காணாமல் போன பொருட்களுக்கான தொகைகளை வசூலிக்க  வேண்டும் என ஆளுநருக்கு, தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் ரகுபதி மனு அளித்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!